சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிபோதையில் ரகளை போலீசுக்கு கத்திக்குத்து

Added : அக் 07, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை--சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை ச்சேர்ந்தவர் சக்திவேல்.32. கடலோர காவல் நிலைய போலீஸ்காரர். இவர் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு காத்திருப்பு பெட்ரோல் பங்க் அருகே சிலர்

மயிலாடுதுறை--சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை ச்சேர்ந்தவர் சக்திவேல்.32. கடலோர காவல் நிலைய போலீஸ்காரர். இவர் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு காத்திருப்பு பெட்ரோல் பங்க் அருகே சிலர் குடிபோதையில் சாலையோரம் நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியே வந்த சக்திவேல் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.இதனையடுத்து சக்திவேல் வீட்டிற்குச் செல்லும் வழியில் நின்றிருந்தார். அப்போது மீண்டும் அங்கு வந்த போதை நபர்கள் சக்திவேலை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். தலை மற்றும் கையில் காயமடைந்த சக்திவேல் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பாகசாலை போலீசார், சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X