பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளலூர் வாய்க்காலில் கான்கிரீட் கட்டுமானம்! குளத்துக்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : உக்கடம் மேம்பாலம் பணிக்காக, ஆத்துப்பாலத்தில் வெள்ளலுார் வாய்க்கால் இருபுறமும் துாண்கள் கட்டி, கான்கிரீட் கட்டுமானமாக வாய்க்கால் புதுப்பிக்கப்படுகிறது. பருவ மழை சமயத்தில், இப்பணி மேற்கொள்வதால், வெள்ளலுார் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் ஆர்வலர்கள் வருத்தப்படுகின்றனர்.உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம்


கோவை : உக்கடம் மேம்பாலம் பணிக்காக, ஆத்துப்பாலத்தில் வெள்ளலுார் வாய்க்கால் இருபுறமும் துாண்கள் கட்டி, கான்கிரீட் கட்டுமானமாக வாய்க்கால் புதுப்பிக்கப்படுகிறது.

பருவ மழை சமயத்தில், இப்பணி மேற்கொள்வதால், வெள்ளலுார் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் ஆர்வலர்கள் வருத்தப்படுகின்றனர்.உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. இதில், பாலக்காடு ரோட்டில் வருவோர் பாலத்தில் பயணிக்க ஏறுதளம், உக்கடத்தில் இருந்து வருவோர் பாலக்காடு ரோட்டுக்குச் செல்ல, இறங்கு தளம் அமைப்பதற்கான வேலை, தற்போது நடந்து வருகிறது.இதில், ஆத்துப்பாலம் மசூதி அருகே வெள்ளலுார் வாய்க்கால் இருபுறமும் துாண்கள் கட்டி, ஓடுதளம் அமைத்து, 'எஸ்ஸார்' பெட்ரோல் பங்க் அருகே இறங்கும் வகையில், பாலம் கட்டப்படுகிறது.இதற்கு, வெள்ளலுார் வாய்க்காலை கான்கிரீட் கட்டுமானமாக புதுப்பித்துக் கொடுக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலைத் துறை செய்து கொடுக்கிறது.மயானத்துக்கு எதிர்புறமும் வாய்க்கால் மற்றும் பாலத்துக்கான துாண்கள் கட்டப்படுகின்றன.

பாலக்காடு ரோடு, சதாம் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, கான்கிரீட் வாய்க்கால் கட்டும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது.இதன் காரணமாக, வெள்ளலுார் குளத்துக்கு நீர் கொண்டு செல்வது தடைபடுகிறது. மழைக்காலத்தில், வாய்க்காலில் கட்டுமான பணி மேற்கொள்வதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தப்படுகின்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பாலம் கட்டுமான பணியும் முக்கியம்; வாய்க்கால் சீரமைப்பதும் முக்கியம். வாய்க்காலில் இருந்த அடைப்புகள் மற்றும் மண் மேடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும்போது, குளத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லப்படும்' என்றனர்.மழை நீரை சேமிக்கணும்கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 'ஆத்துப்பாலம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடப்பதால், வாய்க்காலில் சுவர் எழுப்பி, நீர் வரும் பாதையில் மண் மூடியிருக்கிறது. இதனால், வெள்ளலுார் குளத்துக்கு தண்ணீர் செல்லவில்லை. பருவ மழை பெய்யும் நேரமிது. கிடைக்கும் மழை நீரை சேமிக்க வேண்டும். அச்சமயத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். நீர்வள ஆதாரத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுதொடர்பாக, அரசு துறைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X