பொது செய்தி

தமிழ்நாடு

போகுதே...போகுதே! கொஞ்சம், கொஞ்சமாக ரேஷன் பொருட்கள் பொறுத்துப் பார்த்த ஊழியர்கள் தட்டினர் புகார்!

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மூட்டைகளின் அளவு, சமீபகாலமாக ஐந்து கிலோ வரை குறைந்து வருகிறது. இதை கண்டறிந்த ரேஷன்கடைக்காரர்கள், பொருட்களின் அளவு சகிதம் புகார் அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்திலுள்ள 1,403 ரேஷன் கடைகளுக்கு, கோவையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள்

கோவை : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மூட்டைகளின் அளவு, சமீபகாலமாக ஐந்து கிலோ வரை குறைந்து வருகிறது.

இதை கண்டறிந்த ரேஷன்கடைக்காரர்கள், பொருட்களின் அளவு சகிதம் புகார் அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்திலுள்ள 1,403 ரேஷன் கடைகளுக்கு, கோவையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான நான்கு கிடங்குகளிலிருந்து, ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன.சர்க்கரை, பச்சரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கோதுமை ஆகியவை 50 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளில் மாதத்திற்கு, ஒரு கலர் நுாலால் தைத்து வழங்கப்படுகிறது. இதில் சர்க்கரை மூட்டை மட்டும் நைலான் சாக்கிலும், பாமாயில் அட்டை பெட்டியிலும் வழங்கப்படுகிறது.நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில், எடை சரிபார்த்து லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. மாதந்தோறும் பொருட்களின் எடையில் குறைந்த அளவு வேறுபாடுகள் இருக்கும்.லாரிகளுக்கு மூட்டையை மாற்றும்போதும், சுமைதுாக்குவோர் ஊக்குகளால் குத்தி எடுக்கும் போதும் ஏற்படும் சேதத்தால் எடை குறையும். இது தவிர்க்க முடியாதது என்பதால், ரேஷன் கடைக்காரர்கள் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

ஆனால் இம்மாதம் இறக்கிய கோவையிலுள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், ஐந்து முதல் பத்து கிலோ வரை, பொருட்களின் எடை குறைவாக இருந்தது.கோபமடைந்த ரேஷன்கடை பணியாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடம் புகார் செய்தனர்.

இது குறித்து, ரேஷன் கடைப்பணியாளர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் மாதந்தோறும் அரிசி ரகங்கள் 40 முதல் 60 மூட்டைகள் வரையும், துவரம்பருப்பு பத்து மூட்டைகளும், சர்க்கரை 20 மூட்டைகளும், கோதுமை 30 மூட்டைகள் வரையும் லாரிகளிலிருந்து இறக்கப்படும்.அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றிலும், இரண்டு முதல் மூன்று கிலோ வரையும், சர்க்கரை ஐந்து கிலோ வரையும், துவரம் பருப்பு ஏழு கிலோ வரையும், கோதுமை 4 கிலோ வரையும் குறைந்துள்ளது.கடந்த சில மாதங்களாக எடை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இம்மாதம் நாங்கள் எடையை அளந்த பின்பே பொருட்களை இறக்கினோம். அதனால் எவ்வளவு குறைந்துள்ளது என்பதை துல்லியமாக கண்டறிந்துள்ளோம். இறக்கிய பொருட்களின் சரியான அளவை குறிப்பெடுத்து, லாரி டிரைவரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற்று அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம்.யாரோ சிலர் திருடி பணம் சம்பாதிப்பதற்கு, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். அதனால் இனிமேல் எடை போட்டுத்தான் பொருட்களை இறக்குவோம். எடை குறைவுக்கு அதிகாரிகளே காரணம்.

அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர். 'விசாரித்து நடவடிக்கை'தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) மோகன் கூறுகையில், ''எடை குறைவாக உள்ள ரேஷன்கடைகளில், நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வர். எடை குறைவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், எந்த லாரியில் கொண்டு செல்லப்பட்டது, லாரி டிரைவர் யார், அவருடன் சென்ற பணியாளர்கள் யார், மூட்டையிலுள்ள வரிசை எண் அடிப்படையில், பேக்கிங் செய்தவர்கள் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X