கவுலி பிரவுன் ரோட்டில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுலி பிரவுன் ரோட்டில் மாற்றம்

Added : அக் 07, 2021
Share
கோவை : கோவை கவுலிபிரவுன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்ததையடுத்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க, போலீசார் பேரிகார்டு அமைத்தனர்.கவுலி பிரவுன் ரோட்டில் மருத்துவமனைகள், லேப்கள், அதிகம் உள்ளதால், அங்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள், ரோட்டிலேயே வாகனம் நிறுத்தி விடுவதே போக்கு வரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது.இதை தவிர்க்கும் வகையில்,

கோவை : கோவை கவுலிபிரவுன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்ததையடுத்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க, போலீசார் பேரிகார்டு அமைத்தனர்.

கவுலி பிரவுன் ரோட்டில் மருத்துவமனைகள், லேப்கள், அதிகம் உள்ளதால், அங்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள், ரோட்டிலேயே வாகனம் நிறுத்தி விடுவதே போக்கு வரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது.இதை தவிர்க்கும் வகையில், கவுலி பிரவுன் ரோடு முழுவதும், இடது பக்கம் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்து, தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். அந்த பகுதியிலுள்ள, மருத்துவமனைகள், லேப்கள், வணிக வளாக நிறுவனங்களிடம் ரோட்டில் வாகனம் நிறுத்த அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.வலதுபக்கமும் இதேபோல் பேரிகார்டு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X