இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்'

Added : அக் 07, 2021
Share
புதுச்சேரி-'பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. பழங்குடியின மக்களை, பட்டியல் இனத்தவர்

புதுச்சேரி-'பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. பழங்குடியின மக்களை, பட்டியல் இனத்தவர் பட்டியலில் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது என புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உள்ளாட்சி வார்டு அமைப்புகளை மாற்றம் செய்து மீண்டும் தேர்தலை நடத்துவதாக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.ஆனால், புதுச்சேரி முன்னாள் கவுன்சிலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றார். பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான ஆணை 2017ம் ஆண்டு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது. இப்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றாவிட்டால், அரசியல் சட்ட உரிமைகளை மீறும் செயலாக இருக்கும். இதனை அரசு கவனத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X