கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக 73 பேருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக 73 பேருக்கு தொற்று

Added : அக் 07, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 4,733 பேருக்கு நடத்திய பரிசோதனையில், 73 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 110 பேர் மருத்துவமனையிலும், 529 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மாநிலத்தின்

புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 4,733 பேருக்கு நடத்திய பரிசோதனையில், 73 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 110 பேர் மருத்துவமனையிலும், 529 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,26,742 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 76 பேர் உட்பட, இதுவரை 1,24,259 பேர் குணமடைந்து உள்ளனர். தொற்று சதவீதம் 1.54 ஆகவும், குணமடைவோர் சதவீதம் 98.04 ஆக உள்ளது. கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி அரவிந்தர் வீதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா உயிரிழப்பு, 1844 ஆக உயர்ந்தது. நேற்று 2,715 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை 2வது தடுப்பூசி உட்பட 10,32,254 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X