குறைந்தபட்சம் தெருவில் லைட்டாவது போடுங்க! பீளமேடு - சவுரிபாளையம் ரோட்டில் அவசரம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
குடிநீர் பிடிக்க சங்கடம்மாநகராட்சி, 69வது வார்டுக்கு உட்பட்ட, பெரியார் நகர் பகுதியில், பொதுக்குழாய் அமைந்துள்ள இடம் பராமரிப்பின்றி, அசுத்தமாக உள்ளது. இக்குழாயில் குடிநீர் பிடித்து பயன்படுத்த, மக்கள் சங்கடப்படுகின்றனர்.- ஆலிஸ், பெரியார் நகர்.சிதிலமடைந்த கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, கோணவாய்க்கால்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியில் உள்ள,


குடிநீர் பிடிக்க சங்கடம்மாநகராட்சி, 69வது வார்டுக்கு உட்பட்ட, பெரியார் நகர் பகுதியில், பொதுக்குழாய் அமைந்துள்ள இடம் பராமரிப்பின்றி, அசுத்தமாக உள்ளது. இக்குழாயில் குடிநீர் பிடித்து பயன்படுத்த, மக்கள் சங்கடப்படுகின்றனர்.- ஆலிஸ், பெரியார் நகர்.

சிதிலமடைந்த கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, கோணவாய்க்கால்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கம்பத்தை அகற்றிவிட்டு புது கம்பம் அமைக்க வேண்டும்.- கிருஷ்ணமூர்த்தி, மதுரை வீரன் கோவில் வீதி.

சாக்கடை கால்வாய் வசதியில்லைமலுமிச்சம்பட்டி, இந்திரா நகரில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையோரம் குளம் போல் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராஜேந்திரன், இந்திரா நகர்.

விளக்காவது பொருத்துங்க!பீளமேடு - சவுரிபாளையம் ரோடு, விரிவாக்கம் செய்து பல மாதங்களாகியும், சாலையின் மத்தியில் உள்ள, மின் கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்காமல் உள்ளனர். இதனால், போக்குவரத்து இடையூறும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இக்கம்பங்களில், மின் விளக்குகளும் இல்லை. இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், இக்கம்பங்களில் விளக்குகளையாவது பொருத்த வேண்டும்.- யுவராஜ், திருமகள் நகர்.

துாய்மை பணியாளர்கள் மாயம்வடவள்ளி, பொம்மணம்பாளையம் புவனேஸ்வரி அம்மன் கோவில் பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், குப்பை குவிந்துள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- கணேசன், பொம்மணம்பாளையம்.

கட்டட இடிபாடுகளால் கால்வாய் அடைப்புமாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, அப்பா நாயுடு லே-அவுட் பகுதியில், சாக்கடை கால்வாய் முழுவதும் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு, அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.- சண்முகம், கணபதி.

மின் விபத்து அபாயம்எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, வெங்கடாசலம் நகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 8) சிதிலமடைந்து, விழும் நிலையில் உள்ளது. இக்கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் முன், இதை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைப்பது அவசியம்.- மகேஸ்வரி, வெங்கடாசலம் நகர்.

ஆபத்தான கம்பம்கோவை, வ.உ.சி., பூங்காவில் அமைந்துள்ள, உயர் மின் கோபுர விளக்கு கம்பத்தின் கீழ் பகுதியில், மூடி இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மின் மோட்டார் மற்றும் மின் ஒயர் வெளியில் தெரிகிறது.- தேவராஜ், பீளமேடு.

இருகூரில் குப்பை குவியல்இருகூர், ஜின்னிங் பேக்கடரி ரோடு, ஸ்ரீ நகர் அருகே உள்ள, மாணிக்கம் நகரில், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. காற்றில் பறக்கும் இவற்றால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சசிகுமார், மாணிக்கம் நகர்.

ஆபத்தான மரத்தை பாதுகாப்பாக அகற்றணும்மாநகராட்சி, 71வது வார்டுக்கு உட்பட்ட, ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ., காம்பவுண்ட் பகுதியில், விழும் நிலையில் உள்ள, மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- நல்லமுத்து, ரேஸ்கோர்ஸ்.

ஆக்கிரமிப்பால் அவதிசெல்வபுரம், முத்துசாமி காலனியில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; மக்கள் நடக்க வழியின்றி சிரமப்படுகின்றனர்.- அர்ஜுனன், முத்துசாமி காலனி.

சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, எம்.ஜி.ஆர்., நகரில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- சிவக்குமார், எம்.ஜி.ஆர்., நகர்.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்மாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, லட்சுமிபுரம், ரங்கசாமி நாயுடு லே-அவுட்டில், சாக்கடை கால்வாய் மற்றும் சிலாப்கள் சிதிலமடைந்துள்ளன. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- கிருஷ்ணகுமார், லட்சுமிபுரம்.

குண்டும் குழியுமான ரோடுதுடியலுார் அருகே கே.என்.ஜி., புதுாரில் இருந்து, வி.கே.எல். நகர் வழியாக, மேட்டுப்பாளையம் ரோடு, செல்லும் சாலை சிதிலமடைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- சந்தர், கே.என்.ஜி.புதுார்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட, ரத்தினபுரி, தில்லை நகர், நஞ்சப்ப கவுண்டர் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- விஜயகுமார், நஞ்சப்ப கவுண்டர் வீதி.

புது மின் கம்பம் வேண்டும்மாநகராட்சி, நுாறாவது வார்டுக்கு உட்பட்ட, மேட்டூர், அம்மன் புதுார், புதுவீதியில் உள்ள, மின் கம்பம்(எண்: 51) சிதிலமடைந்துள்ளது. சிதிலமடைந்துள்ள இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புதுகம்பம் அமைக்க வேண்டும்.- முத்துசாமி, மேட்டூர்.

விளக்கு எரிவதில்லைசிங்காநல்லுார், விவேகானந்தா நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 9) கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விளக்கு எரிவதில்லை.- ஏகாம்பரம், விவேகானந்தா நகர்.

தெருநாய் தொல்லை அதிகம்காந்திபுரம், டாடாபாத், சுப்பராயன் வீதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் சுற்றித்திரியும் இவை, இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- மகாலட்சுமி, சுப்பராயன் வீதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X