விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பஸ் ஜப்தி| Dinamalar

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பஸ் ஜப்தி

Added : அக் 07, 2021
Share
கோவை : விபத்தில் இறந்த மட்டன் வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.சாய்பாபாகாலனி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்,41. மட்டன் ஸ்டால் நடத்தி வந்தார். 2016, பிப்., 21ல், உக்கடம் - பாலக்காடு ரோட்டில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் இறந்தார்.இழப்பீடு வழங்க கோரி, அவரது

கோவை : விபத்தில் இறந்த மட்டன் வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

சாய்பாபாகாலனி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்,41. மட்டன் ஸ்டால் நடத்தி வந்தார். 2016, பிப்., 21ல், உக்கடம் - பாலக்காடு ரோட்டில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் இறந்தார்.இழப்பீடு வழங்க கோரி, அவரது மனைவி மற்றும் தாயார் தரப்பில், கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிமன்றம், 21 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.கோர்ட் உத்தரவுக்கு பிறகும், கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்ததால் அதே கோர்ட்டில், அவரது தாயார் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X