நிலத்தில் உடைந்து விழுந்த மின்கம்பம்: மின்சாரம் தாக்கி நாய் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-காட்டேரிக்குப்பத்தில் விவசாய நிலத்தில், ஒரு மாதமாக அறுந்து கிடக்கும் மின்கம்பியில் சிக்கிய நாய், மின்சாரம் தாக்கி இறந்தது. காட்டேரிக்குப்பம் ஏரிக்கரை பகுதியை சுற்றியுள்ள பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை, காய்கறி வகைகள், கரும்பு உள்ளிட்டவை பயிர் செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 4ம் தேதி சூறை காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, அப்துல் ஹை என்ற விவசாயி

புதுச்சேரி-காட்டேரிக்குப்பத்தில் விவசாய நிலத்தில், ஒரு மாதமாக அறுந்து கிடக்கும் மின்கம்பியில் சிக்கிய நாய், மின்சாரம் தாக்கி இறந்தது. காட்டேரிக்குப்பம் ஏரிக்கரை பகுதியை சுற்றியுள்ள பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை, காய்கறி வகைகள், கரும்பு உள்ளிட்டவை பயிர் செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 4ம் தேதி சூறை காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, அப்துல் ஹை என்ற விவசாயி நிலத்தின் அருகே இருந்த மின்கம்பம் அடியோடு உடைந்து விழுந்தது. இதானல் அப்பகுதியில், விவசாய நிலங்களுக்கான மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உடைந்த மின் கம்பத்தை இதுவரை சீரமைக்காததால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடைந்து விழுந்த மின்கம்பத்தின் கம்பிகளில் மின்சாரம் இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று, நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய நாய், மின்சாரம் தாக்கி இறந்தது. இதுபோன்று, விவசாயிகள் யாரேனும் இறப்பதற்கு முன்பாக, உடைந்து விழுந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X