பொது செய்தி

இந்தியா

மூடப்படாத 'சென்டர் மீடியன்' இடைவெளி

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கோரிமேடு சாலையில், சென்டர் மீடியன் இடைவெளியில் பேரிகார்டுகளை அகற்றிவிட்டு, புகுந்து செல்லும் வாகனங்களால் தினசரி விபத்து ஏற்படுகிறது.சாலை விபத்துக்களை தடுக்க, சென்டர் மீடியன்களில் தேவையற்ற இடத்தில் உள்ள இடைவெளிகளை மூட வேண்டும் என, சாலை பாதுகாப்பு நிபுணர்கள் குழு, புதுச்சேரி அரசுக்கு பரிந்துரை செய்தது.ராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும்

புதுச்சேரி-கோரிமேடு சாலையில், சென்டர் மீடியன் இடைவெளியில் பேரிகார்டுகளை அகற்றிவிட்டு, புகுந்து செல்லும் வாகனங்களால் தினசரி விபத்து ஏற்படுகிறது.சாலை விபத்துக்களை தடுக்க, சென்டர் மீடியன்களில் தேவையற்ற இடத்தில் உள்ள இடைவெளிகளை மூட வேண்டும் என, சாலை பாதுகாப்பு நிபுணர்கள் குழு, புதுச்சேரி அரசுக்கு பரிந்துரை செய்தது.ராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில், மூடப்பட்டுள்ள பட்டேல் பெட்ரோல் பங்க் எதிரில் சென்டர் மீடியன் இடைவெளியை, நிரந்தரமாக கான்கிரீட் கலவை கொண்டு மூடவில்லை. தற்காலிகமாக பேரிகார்டு அமைத்து, மூடியுள்ளனர்.டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்வோர், பேரிகார்டுகளை நகர்த்தி விட்டு, புகுந்து செல்கின்றனர். இதனால், கோரிமேட்டில் இருந்து முருகா தியேட்டர் வரும் வாகனங்களும், முருகா தியேட்டரில் இருந்து கோரிமேடு செல்லும் வாகனங்கள், குறுக்கே புகும் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்குகின்றன.ஆனால், இந்த இடைவெளியை நிரந்தரமாக மூடுவது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.போக்குவரத்து போலீஸ், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியம், பேரிகார்டுகளை அகற்றி சாலையின் குறுக்கே புகுந்து செல்லும் வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயல் ஆகியவற்றால், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்வோர் விபத்தில் சிக்கி, கஷ்டப்படுகின்றனர்.விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு, பட்டேல் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள சென்டர் மீடியன் இடைவெளியை நிரந்தரமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X