பொது செய்தி

இந்தியா

ஜிப்மரில் சமூக இடைவெளியின்றி குவியும் நோயாளிகள்: மருத்துவ பதிவேடு பதிவு முறையில் மாற்றம் வருமா?

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான பதிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், ஒரே இடத்தில் நுாற்றுக் கணக்கான நோயாளிகள் சமூக இடைவெளியை மறந்து, மணிக்கணக்கில் காத்திருப்பதால், கொரோனா தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, மீண்டும்

புதுச்சேரி-ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான பதிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், ஒரே இடத்தில் நுாற்றுக் கணக்கான நோயாளிகள் சமூக இடைவெளியை மறந்து, மணிக்கணக்கில் காத்திருப்பதால், கொரோனா தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற, ஒருங்கிணைந்த மருத்துவ பதிவேடு துறையில் பதிவு செய்ய வேண்டும். மருத்துவ பதிவேடு துறையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிகின்றனர். அதனால், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, பதிவு செய்து, சிகிச்சை பெறும் நிலை உள்ளது.குறிப்பாக, திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளி இல்லாமல் குவிந்து வருவதால், கொரோனா தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜிப்மரில் 50 மருத்துவ துறைகள் உள்ளன. இதில் 21 துறைகளின் புறநோயாளிகள் பிரிவில் தினசரி 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் காத்திருக்க வைக்கின்றனர்.கடந்த காலங்களில் புதிதாக வரும் நோயாளிகள் மட்டும் மருத்துவ பதிவேடு துறையில் பதிவு செய்து, சிகிச்சை பெறுவர்.ஏற்கனவே மருத்துவ பதிவு அட்டை உள்ளவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட புறநோயாளி சிகிச்சை பிரிவுக்கு சென்று விடுவர். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிதாக வருவோரும், மறு சிகிச்சைக்கு வருவோரும் மருத்துவ பதிவேடு துறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.தவறுதலாக ஒருவருக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவினை மாற்றி எழுதினாலும் கூட, மீண்டும் மருத்துவ பதிவேடு துறைக்கு வந்து மாற்றினால்தான் சிகிச்சை பெற முடியும். இதனால் மக்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.தற்போதுள்ள நடைமுறையை ஜிப்மர் நிர்வாகம் கைவிட்டு, ஏற்கனவே இருந்தது போல, அந்தந்த புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடியாக பதிவு செய்யும் முறை கொண்டுவர வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவல் அபாயம் தடுக்கப்படுவதுடன், நோயாளிகளும் அலைச்சல் இன்றி விரைவாக சிகிச்சை பெற வழி ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X