பொது செய்தி

இந்தியா

பள்ளிகள் திறப்பு எப்போது?

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முடியும்' என கவர்னர் தமிழிசை கூறினார்.கவர்னர் தமிழசை, நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றார். குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்

புதுச்சேரி-'மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முடியும்' என கவர்னர் தமிழிசை கூறினார்.கவர்னர் தமிழசை, நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றார். குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மழைக்காலங்களில் கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. அதனை தடுப்பதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன். டெங்கு சிகிச்சைக்கு குழந்தைகளுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.டெங்கு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.இன்று (நேற்று) காலை முதல்வர் சந்தித்தபோது, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தோம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும்.பொதுமக்கள் அனைவரும் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நுாறு சதவீத இலக்கை அடைய இன்னும் மூன்று லட்சம் தடுப்பூசி மட்டுமே போடவேண்டி உள்ளது.1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கான ஆலோசனை, முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X