பொது செய்தி

இந்தியா

மாநில வளர்ச்சிக்கு ஒற்றுமையாக செயல்படுகிறோம்: நமச்சிவாயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
காரைக்கால்-புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன், மாவட்டத் தலைவர் துரைசேனாதிபதி, ராஜசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். உள்துறை அமைச்சர்

காரைக்கால்-புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன், மாவட்டத் தலைவர் துரைசேனாதிபதி, ராஜசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு, அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கும்,எதிர்கொள்ளவும் பா.ஜ.க கூட்டணி கட்சி தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்.ஆர். ஆட்சியில் கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாநில வளர்ச்சிக்காக ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்., கூட்டணியில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு தடையின்றி கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது. 80 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X