நள்ளிரவில் கத்தியுடன் திரிந்த ரவுடி கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் அருகே நள்ளிரவில் கத்தியுடன் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மேற்கு எஸ்.பி., ரங்கநாதன் உத்தரவின்பேரில், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். உறுவையாறு பகுதியில் நின்றிந்த நபர் போலீசாரை பார்த்து, பதுங்கினார். சந்தேகமடைந்த

வில்லியனுார்-வில்லியனுார் அருகே நள்ளிரவில் கத்தியுடன் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மேற்கு எஸ்.பி., ரங்கநாதன் உத்தரவின்பேரில், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். உறுவையாறு பகுதியில் நின்றிந்த நபர் போலீசாரை பார்த்து, பதுங்கினார். சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், கரிக்கலாம்பாக்கம் அரசகுளம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் தாடி அய்யனார்(எ) ராஜதுரை(32) என தெரிய வந்தது. பிரபல ரவுடியான இவர் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று மாலை புதுச்சேரி நீதிபதி யுவராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தாடி அய்யனார் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரெட்டிச்சாவடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், எதிரிகள் தாக்கியதில், இடது கண்ணில் பார்வை இழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X