பருவ மழை தட்டியெடுக்கப்போகிறது! தயாராக இருக்க மாநகராட்சி கமிஷனர் அறிவுரை| Dinamalar

தமிழ்நாடு

பருவ மழை தட்டியெடுக்கப்போகிறது! தயாராக இருக்க மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

Added : அக் 07, 2021
Share
கோவை, : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு, கமிஷனர் ராஜகோபால் அறிவுரை வழங்கியுள்ளார்.இம்மாத இரண்டாவது வாரத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்குமென வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கோவை நகர்ப்பகுதியில் எங்கெங்கு மழை நீர் தேங்கும் என்கிற விபரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. மழை நீர் வடிகால் துார்வாரும் பணி ஏற்கனவே


கோவை, : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு, கமிஷனர் ராஜகோபால் அறிவுரை வழங்கியுள்ளார்.இம்மாத இரண்டாவது வாரத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்குமென வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை நகர்ப்பகுதியில் எங்கெங்கு மழை நீர் தேங்கும் என்கிற விபரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. மழை நீர் வடிகால் துார்வாரும் பணி ஏற்கனவே துவக்கப்பட்டு உள்ளது.அதேபோல், பொக்லைன் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மோட்டார் பம்ப்ஸ், மரஅறுவை இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க, பொறியியல் பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் அறிவுரை வழங்கியுள்ளார்.மண்டலம் வாரியாக என்னென்ன கருவிகள் இருக்கின்றன;

உபயோகப்படுத்தும் நிலையில் உள்ளனவா; பராமரிப்பு பணி செய்ய வேண்டுமா எனவும் கேட்கப்பட்டுள்ளது. அனைத்து இயந்திரங்களையும் சீரமைத்து, தயாராக வைத்திருக்க உத்தரவிட்டிருக்கிறார்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மழை நீர் எங்கெங்கு தேங்கும் என ஏற்கனவே பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறோம். தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள, மண்டலம் வாரியாக, ஏரியா வாரியாக 'டீம்' அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர், உதவி நிர்வாக பொறியாளர், மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அக்குழுவினரே இப்போதும் பயன்படுத்தப்படுவர்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X