பொது செய்தி

இந்தியா

சிலம்பாட்ட மாணவர்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேரு எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து பெற்றனர்.தமிழ்நாடு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கடந்த 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி மாநிலம் சார்பாக பல்வேறு உடல் எடை பிரிவில் 35

புதுச்சேரி-தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேரு எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து பெற்றனர்.தமிழ்நாடு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கடந்த 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி மாநிலம் சார்பாக பல்வேறு உடல் எடை பிரிவில் 35 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 30 மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கம் பெற்று, புதுச்சேரிக்கு தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுத் தந்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்று, புதுச்சேரி திரும்பிய சிலம்பாட்ட மாணவர்கள், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்டக் கழகத் தலைவர் ஸ்டாலின், செயலாளர் அபுல்கலாம், பொருளாளர் ஆனந்தன்ரகு உடனிருந்தனர் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X