பொது செய்தி

இந்தியா

பயிர் காப்பீடு பதிவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளின் விண்ணப்பங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் மத்திய அரசின், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி

புதுச்சேரி-பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளின் விண்ணப்பங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் மத்திய அரசின், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, வேளாண் துறை மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், காலக் கெடுவான ஜூலை 31க்குள் குறைந்த விண்ணப்பங்களே பதிவு செய்யப்பட்டது. இதனால் விண்ணப்பித்த மற்ற விவசாயிகளின் பயிர் பாதிப்படைந்தால் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டு தொகை பெறமுடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து வேளாண் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.வேளாண் அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், பயிர் காப்பீடுக்கு விண்ணப்பித்த விவசாயிகளில் மீதமுள்ள விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டது. அதன்பேரில், விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளின் விண்ணப்பங்களை நேற்று(6ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதன் அடிப்படையில், பயிர் காப்பீட்டுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, மாநில வேளாண் துறை இணையதளத்தில் வெளியிடுமாறு இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X