பொது செய்தி

இந்தியா

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்போர் யாராக இருந்தாலும் நடவடிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். அவர் நேற்று சமூக வலைத்தளத்தில் அளித்த பேட்டி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர்

புதுச்சேரி-புதுச்சேரியில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். அவர் நேற்று சமூக வலைத்தளத்தில் அளித்த பேட்டி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வாகனத்தை ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் மகன் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதால், ஆட்சியை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தால் தான் உண்மை வெளிவரும். சம்பந்தப்பட்ட இணை அமைச்சர் மகன், அவருடன் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில், வார்டுகள் பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக காங்., உள்பட பல்வேறு கட்சியினர் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது. அதன்பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு தகுதியில்லாதவர் தாமஸ். ஆணையர் தன்னிச்சையாக தேர்தலை அறிவிப்பதும், தவறு நடந்து விட்டது என கூறி தேர்தலை நிறுத்துவதும் புதுச்சேரி அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. விதிமுறைகளுக்குட்பட்டு, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் மூன்று நம்பர் லாட்டரி, கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X