பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் இருப்பதாக புகார்

Added : அக் 07, 2021
Share
Advertisement
உடுமலை : நகரில், தொழில் உரிமம் பெறாமலும், பழைய உரிமத்தை புதுப்பிக்காமலும், பலர், தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. நகர்புறங்களில், அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துவோர், உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து வணிகர்கள், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் புரிவோர் என, தொழில்


உடுமலை : நகரில், தொழில் உரிமம் பெறாமலும், பழைய உரிமத்தை புதுப்பிக்காமலும், பலர், தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நகர்புறங்களில், அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துவோர், உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து வணிகர்கள், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் புரிவோர் என, தொழில் புரிவோர் வகைப்படுத்தப்படுகின்றனர்.அவர்கள், நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், தொழில் துவங்க வேண்டுமெனில், நகர அமைப்பின் வாயிலாக, தொழில் உரிமம் பெறுதல் வேண்டும். தொழிற்சாலைகள், சேமிப்புக்கிடங்குகள், அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவற்றுக்கு அரசுத் துறைகள் வாயிலாக, அனுமதி பெற்றிருந்தாலும், நகராட்சி அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

அதன்படி, உடுமலை நகரில், 3,500க்கும் மேற்பட்டோர், தொழில் புரிபவர்களாக கண்டறியப்பட்டனர். ஆனால், பலர், தொழில் உரிமம் பெறாமலும், பழைய உரிமத்தை புதுப்பிக்காமலும் தொழில் புரிவதாக புகார் எழுந்துள்ளது.இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு, கேள்விக் குறியாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில், தொழில்கள் துவக்கப்படுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டும் வருகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் தொழில் புரிவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. தொழில் உரிமத்துடன் குப்பை அகற்ற சேவை வரியும் வசூலிக்கப்படுகிறது. கட்டட உரிமையாளர்களின் சொத்து வரியுடன், தொழில் உரிமத்தொகையையும் இணைத்து வசூலிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X