கருமலை எஸ்டேட்டில் தொழில்வரி பிடித்தமில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருமலை எஸ்டேட்டில் தொழில்வரி பிடித்தமில்லை

Added : அக் 07, 2021
Share
வால்பாறை : கருமலை எஸ்டேட்டில் தொழிலாளர்கள் சம்பளத்தில், தொழில்வரி பிடித்தம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு தேயிலைத்தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த, 4ம் தேதி தினக்கூலி அடிப்படையில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும், தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், என, வலியுறுத்தி

வால்பாறை : கருமலை எஸ்டேட்டில் தொழிலாளர்கள் சம்பளத்தில், தொழில்வரி பிடித்தம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு தேயிலைத்தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த, 4ம் தேதி தினக்கூலி அடிப்படையில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும், தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கருமலை குரூப் எஸ்டேட் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் அரையாண்டிற்கான தொழில்வரி, தொழிலாளர்களின் செப்., மாத சம்பளத்தில் பிடித்தம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அமீது கூறுகையில், ''கருமலை குரூப் எஸ்டேட் நிர்வாகத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பிற தோட்ட நிறுவனங்களும், தொழில்வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். தொழில்வரி பிடித்தம் செய்தால், போராட்டம் நடத்துவோம்,' என்றார

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X