ஒலக்கூர் ஒன்றியத்தில் அமைதியான ஓட்டுப்பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒலக்கூர் ஒன்றியத்தில் அமைதியான ஓட்டுப்பதிவு

Added : அக் 07, 2021
Share
திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது.ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 16 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 52 ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தலுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு, கையுறை, முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது.ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 16 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 52 ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தலுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு, கையுறை, முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. கைகளுக்கு சானிடைசர் வழங்கியும், தெர்மோ ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகு வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். 181 ஓட்டுச்சாவடிகளில் பதற்றம் நிறைந்த 44 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஓட்டுப்பதிவின் போது எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்தது. சாரம், வெள்ளிமேடுபேட்டை ஆகிய இடங்களில் மட்டும் தள்ளு, முள்ளு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X