பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை துவங்கி உதவிக்கரம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராாட்சி பள்ளி முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளை துவங்கி, கால் இழந்த இளைஞனுக்கு, செயற்கை பாதம் வழங்கி உதவியுள்ளனர்.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சியின் பழமை வாய்ந்த, இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளனர்.பள்ளியின், 1986ம் ஆண்டு ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள் பலரும் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராாட்சி பள்ளி முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளை துவங்கி, கால் இழந்த இளைஞனுக்கு, செயற்கை பாதம் வழங்கி உதவியுள்ளனர்.

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சியின் பழமை வாய்ந்த, இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளனர்.பள்ளியின், 1986ம் ஆண்டு ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள் பலரும் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். அவர்களும், உள்ளூரில் உள்ள முன்னாள் மாணவர்களும் இணைந்து, 'பொள்ளாச்சி போர்வேர்ட் டிரஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கி, பல்வேறு நலத்திட்டங்களை செய்கின்றனர்.

இந்தாண்டில், கொரோனா பரவலால் மக்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகம் இருப்பதை உணர்ந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோவில்பாளையம், கோலார்பட்டி, வால்பாறை, சொக்கனுார், பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் உபகரணங்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி, கையுறைகள் உள்ளிட்டவை வழங்கினர்.அதன் தொடர்ச்சியாக, விபத்தில் கால் பாதத்தை இழந்த சஞ்சித்குமார் என்ற கல்லுாரி மாணவருக்கு, ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட சிலிக்கான் பாதம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் முன்னிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X