சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்த அலுவலர் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.விக்கிரவாண்டி ஒன்றியம், வா.பகண்டை ஊராட்சியில் ஓட்டுச்சாவடி எண்.169ல் ஓட்டுச் சாவடி அலுவலராக இடைநிலை ஆசிரியர் இருதயபிரகாஷ், 48; பணியில் இருந்தார்.பிற்பகல் 2:00 மணியளவில் திடீரென அவர் இருக்கையிலிருந்து மயங்கி விழுந்தார். உடன், தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.விக்கிரவாண்டி ஒன்றியம், வா.பகண்டை ஊராட்சியில் ஓட்டுச்சாவடி எண்.169ல் ஓட்டுச் சாவடி அலுவலராக இடைநிலை ஆசிரியர் இருதயபிரகாஷ், 48; பணியில் இருந்தார்.பிற்பகல் 2:00 மணியளவில் திடீரென அவர் இருக்கையிலிருந்து மயங்கி விழுந்தார். உடன், தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ராதாபுரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி இயக்குனர் ஜோதி, பி.டி.ஓ., நாராயணன் ஆகியோர் மாற்று அலுவலரை அந்த ஓட்டுச்சாவடியில் நியமித்தனர். இதனால் அந்த ஓட்டுச்சாவடியில் 20 நிமிடம் பரபரப்பு நிலவியது. ஓட்டுப்பதிவு தடையின்றி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X