பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையிலான அதிகாரிகள், கள்ளக்குறிச்சியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையிலான அதிகாரிகள், கள்ளக்குறிச்சியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது.அவ்வாறு பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம், கல்லீரலில் நோய் ஏற்படுகிறது என்பதை வலியுறுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து ஓட்டல் மற்றும் பேக்கரிகள் என 35 கடைகளுக்கு தலா 2 கேன்கள் வழங்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தி வீணாகிய சமையல் எண்ணெயினை அந்த கேன்களில் ஊற்றி வைக்குமாறும், மாதம் இரண்டு முறை அந்த கேன்களில் உள்ள எண்ணெயினை தனியார் ஏஜன்சியினர் சேகரித்துக் கொள்வர். இந்த எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வின் போது, உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், அன்புபழனி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X