பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுவுக்கு எதிராக விழிப்புணர்வுதமிழக அரசு சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்படும், நரம்பு தளர்ச்சி, கை

மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு

தமிழக அரசு சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்படும், நரம்பு தளர்ச்சி, கை மற்றும் கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும் நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும். கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என்றனர்.

நிகழ்ச்சியில், வருவாய்த்துறை, நகராட்சியை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பண்ணை குட்டை அமைக்கலாம்கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 கிராமஊராட்சிகள் அமைந்துள்ளன. ஒரு சில ஊராட்சிகளில் இரண்டும், அதற்கு மேற்பட்ட சிறு கிராமங்களும் அமைந்துள்ளன.தென்மேற்கு பருவமழையானது, ஒரு சில பகுதிகள் தவிர, பெரும்பாலான கிராமங்களில், சராசரியை விட குறைவாகவே பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் பெரிதாக உயரவில்லை. எனவே, கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், காய்கறி மற்றும் பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பண்ணைக்குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஒரே ஊராட்சியில், 10 குட்டைகள் வரை அமைத்துக்கொடுக்கப்படுகிறது.இலவச பண்ணை குட்டை அமைத்து தருவதற்காக, சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.இப்பணியில், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களும் ஈடுபட்டு, சிறு, குறு விவசாயிகளை சந்தித்து வருகின்றனர்.

பள்ளிகளில் வேலைவாய்ப்பக பதிவுபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பக பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்கள், தங்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன், மதிப்பெண் சான்று வழங்கும் நாளன்று பள்ளிக்கு வர வேண்டும்.வேலைவாய்ப்பக பதிவு பணி, அக்.,18 வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். அனைத்து நாட்களுக்கும் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளே, பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். https://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்யலாம் என, கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.இடைத்தேர்தலில் அமைச்சர் பிரசாரம்அ.தி.மு.க., பலம் பெற்றுள்ள கொங்கு மண்டலத்தில், தி.மு.க., தன் செல்வாக்கை வளர்க்க தீவிரமாக செயல்படுகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சியில் இடைத்தேர்தல் நடப்பதால், வி.ஐ.பி.,க்கள் பிரசாரம் செய்து, கட்சி சார்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றுகின்றனர்.பொள்ளாச்சி, தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வரும், 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் நாராயணமூர்த்தி மற்றும் அ.தி.மு.க., சார்பில் சரஸ்வதி போட்டியிடுகின்றனர்.தென்குமாரபாளையத்தில் நேற்று, தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்களிடையே தி.மு.க., சார்பில் போட்டியிடும் நாரயணமூர்த்திக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.ஆளும்கட்சியை சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், நலத்திட்டங்களை பெறுவது எளிதாகும், என, பிரசாரத்தில் குறிப்பிட்டார். கட்சி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.தளி ரோடு பஸ் ஸ்டாப்பில் நெரிசல்உடுமலை தளி ரோடு குட்டைத்திடல் நுாலகம் அருகே, பஸ் ஸ்டாப் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருமூர்த்திமலை, அமராவதி நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள், இந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.உடுமலை தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை உட்பட இடங்களுக்கு செல்பவர்கள், இந்த பஸ் ஸ்டாப்பில் இறங்குகின்றனர். அங்கு நால்ரோடு சந்திப்பும் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும்.இந்நிலையில், பஸ் ஸ்டாப் பகுதியில், இருபுறங்களிலும், பஸ்கள் நிறுத்தும் போது, நால்ரோடு சந்திப்பில் பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், நெரிசல் அதிகரித்து, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.எனவே, நுாலகம் பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் நிறுத்தும் இடம் குறித்து, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடையை மீறி சிகரெட் விற்பனைஉடுமலை நகரில், பொது இடங்களில், புகை பிடிப்போர் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.இதேபோல், பள்ளி, கல்லுாரி என, கல்லுாரிநிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில்,சிகரெட் மற்றும் பீடி விற்பனைக்கு ஐகோர்ட்தடை உத்தரவு உள்ளது. இருப்பினும், நகரில், போதிய கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை இல்லாததால், கல்வி நிறுவனங்களின்அருகிலேயே புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறது.தன்னார்வலர்கள் கூறுகையில், 'பலபள்ளிகளின் அருகேயுள்ள கடைகளில்,சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது.விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.விவசாயிகளுக்கு நாளை முகாம்மத்திய, மாநில அரசு நுண்ணீர் பாசனம் அமைக்க, சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்குகிறது.இந்த பாசனம் அமைக்க விரும்பும், ஐந்துஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு, சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்க நாளை (8ம் தேதி) கொமரலிங்கம் மேற்கு மற்றும் கிழக்கு கிராம நிர்வாக அலுவலகங்களில் முகாம் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது.கூடுதல் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் பிரபாகரனை, 75388 77132 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா தெரிவித்தார்.மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்வேளாண் சட்டங்களை திரும்ப பெறவலியுறுத்தி, உ.பி., மாநிலத்தின் விவசாயிகள்நடத்திய போராட்டத்தின் போது, விவசாயிகள்மீது

கார் மோதியதில், ஒன்பது இறந்தனர். இந்த விபத்தை,கொலை வழக்கு பதிவு செய்து,காரணமானவர்களைகைது செய்ய வலியுறுத்தியும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மா.கம்யூ., நகர செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள்கனகராஜ், சசிகலா, விவசாயிகள் சங்க செயலாளர் பால தண்டபாணி, சி.ஐ.டி.யு., மாவட்டக் குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் உட்பட பலர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X