பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பயிற்சி நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்: கலெக்டர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான அப்ரண்டிஸ் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:மாவட்ட திறன் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் இம்முகாமில், அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் நிறுவனங்கள் பயிற்சிக்கு தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய

கள்ளக்குறிச்சி-உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான அப்ரண்டிஸ் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:மாவட்ட திறன் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் இம்முகாமில், அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் நிறுவனங்கள் பயிற்சிக்கு தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளன.ஐ.டி.ஐ., பயிற்சி பெறாத 10, 12ம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டிஸ் ஆக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.பயிற்சிக்கு உதவித்தொகை 8,500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.இப்பயிற்சி சான்றிதழ் பெறுவதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.கூடுதல் தகவல்களுக்கு உதவி இயக்குனர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி தொலைபேசி எண். 04146-294989, மற்றும் 96296 66279, 97916 08373 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X