பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மல்லர் கம்பம் போட்டிகள் விழுப்புரம் வீரர்கள் சாதனை

Added : அக் 07, 2021
Share
Advertisement
விழுப்புரம்-மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டிகளில், விழுப்புரம் வீரர், வீராங்கனைகள் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.மத்திய பிரேதசம், உஜ்ஜைன் பகுதியில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது.இதில், 21 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த 48

விழுப்புரம்-மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டிகளில், விழுப்புரம் வீரர், வீராங்கனைகள் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.மத்திய பிரேதசம், உஜ்ஜைன் பகுதியில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது.இதில், 21 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த 48 வீரர்களில், 17 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.வீரர் ேஹமசந்திரன் தனி நபர் பிரிவில் வெண்கலமும், வீராங்கனைகள் சங்கீதா, பவித்ரா ஆகியோர் தனி நபர் மற்றும் ஆல்ரவுண்டர் பிரிவு இரண்டிலும் வெண்கலம் வென்றனர்.ஒட்டுமொத்தமாக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரர்கள் 17 வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்துள்ளனர்.இந்த வீரர்கள், வீராங்கனைகள் விழுப்புரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் லட்சுமணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாவட்ட மல்லர் கம்பம் கழகத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஜனார்த்தனன், துணைச் செயலாளர் ஆதித்தன், பொருளாளர் செந்தமிழ் அன்பு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X