திவான்சாபுதூர் ஊராட்சி தலைவராகப்போவது யார்? ஓட்டு சேகரிக்க அ.தி.மு.க., - தி.மு.க., மல்லுக்கட்டு இன்றுடன் பிரசாரம் நிறைவு; 9ம் தேதி ஓட்டுப்பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திவான்சாபுதூர் ஊராட்சி தலைவராகப்போவது யார்? ஓட்டு சேகரிக்க அ.தி.மு.க., - தி.மு.க., மல்லுக்கட்டு இன்றுடன் பிரசாரம் நிறைவு; 9ம் தேதி ஓட்டுப்பதிவு

Added : அக் 07, 2021
Share
ஆனைமலை : திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதுார் ஊராட்சியில், காலியாக உள்ள தலைவர் பதவியிடத்துக்கு, இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம், 12 வார்டுகளில், 4,415 பெண் வாக்காளர்கள் உள்பட, 8,556


ஆனைமலை : திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதுார் ஊராட்சியில், காலியாக உள்ள தலைவர் பதவியிடத்துக்கு, இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம், 12 வார்டுகளில், 4,415 பெண் வாக்காளர்கள் உள்பட, 8,556 வாக்காளர்கள் உள்ளனர்.இன்று, 7ம் தேதி மாலை, 5:00 மணி வரையில், பிரசாரம் நடக்கிறது. வரும், 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தி.மு.க., சார்பில் வேட்பாளர் கலைவாணி மற்றும் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் சரோஜினி போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாக, வீடு வீடாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

யாருக்கு முக்கியத்துவம்பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமுள்ளதால், வேட்பாளர்கள் பெண்களிடம் பல்வேறு வாக்குறுதிகளைக்கூறியும், சமூக நலத்திட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு அதிக திட்டங்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்தும் ஓட்டு சேகரிக்கின்றனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளிலும், விவசாயிகளிடமும் அதிக முக்கியத்துவம் செலுத்தி பிரசாரம் செய்கின்றனர்.இரண்டு கட்சியினரும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்கு, ஒன்றிய பொறுப்பாளர்கள் தோப்புகளிலும், கட்சியினர் தோப்புகளிலும், சிக்கன் பிரியாணி, குவாட்டருடன் தினமும் விருந்து நடத்துகின்றனர்.இதனால், தொண்டர்கள் உற்சாகத்துடன் ஓட்டு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் இருவரும், 95 சதவீதம் பகுதிகளில் பிரசாத்தை நிறைவு செய்துள்ளனர். இன்று, இறுதி கட்ட பிரசாரத்தில் அதிதீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.ஆளுங்கட்சிக்கு ஆதரவுவேட்பாளர் கலைவாணி கூறியதாவது:பல ஆண்டுகளாக அ.தி.மு.க.,வினர் திவான்சாபுதுாரில் வெற்றி பெற்றனர்.

மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. அடிப்படை வசதிகளில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகிறது. நான் வெற்றி பெற்றால், ஊராட்சி முழுவதிலும் புதிய ரோடுகள், கழிப்பிடம், தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்.புதிய தரைமட்ட, உயர்மட்ட தொட்டிகள் கட்டப்பட்டு, மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும். வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில், இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தரப்படும்.வளந்தாயமரம் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும், ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும். மீனாட்சிபுரத்தில் அங்கன்வாடி, கணபதிபாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும். தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கப்படும். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையுள்ளதால், மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.இவ்வாறு, தெரிவித்தார்.கணவர் வழியில்வேட்பாளர் சரோஜினி கூறியதாவது:இங்கு, 25 ஆண்டுகளாக அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. என் கணவர் முனியன், ஊராட்சி தலைவராக இருந்து பல திட்டங்களை செய்துள்ளார். மக்களுக்காக பணியாற்றி கொரோனா தொற்று பாதித்து இறந்தார்.அவர் விட்டுச் சென்ற மக்கள் பணிகளை இனி நான் மேற்கொள்வேன். குடிநீர் பிரச்னையை சரிசெய்ய திவான்சாபுதுாரில், ஒரு லட்சம் லிட்டர்; பூச்சனாரியில், 60 ஆயிரம் லி., கொள்ளளவுள்ள மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. விரைவில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் மற்றும் புதியதாக கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு மக்களுக்கு தினமும், குடிநீர் வழங்கப்படும்.

அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி மற்றும் சிறப்பு நிதியில், தொகுப்பு வீடுகள் புனரமைக்கப்படும். வளந்தாயமரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படும்.முதியோர் உதவித்தொகை, சமூக நலத்திட்டங்கள், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டத்தில் அதிக அளவிலான பயனாளிகள் பயனடைய நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X