சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுபோட அனுமதி கேட்டு கிராம மக்கள் தர்ணா

Added : அக் 07, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதாக கூறியதால் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடி கிராமத்தில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. நேற்று மாலை 5:00 மணியளவில் போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்து விட்டதாகக் கூறி ஓட்டுப்பதிவு நடந்த ஒன்றிய துவக்கப் பள்ளியின் வெளிக் கதவைப்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதாக கூறியதால் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடி கிராமத்தில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. நேற்று மாலை 5:00 மணியளவில் போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்து விட்டதாகக் கூறி ஓட்டுப்பதிவு நடந்த ஒன்றிய துவக்கப் பள்ளியின் வெளிக் கதவைப் பூட்டினர்.இதனால் ஓட்டு போடுவதற்காக வந்த 300க்கும் மேற்பட்டோர் ஓட்டுச்சாவடி மையத்தின் வெளியே நிறுத்தப்பட்டனர்.தங்களை ஓட்டுப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரினர். ஆனால் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்து விட்டதாக போலீசார் அனுமதி மறுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஓட்டுச்சாவடி அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டு போட கிராம மக்களை அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X