சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் ஓட்டுச்சாவடி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவியில் கூடுதல் ஓட்டுச்சாவடி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி கிராமத்தில் 3,100 வாக்காளர் உள்ளனர். இதில் 1550 வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடி எண். 131, 132, 133 என 3 ஓட்டுச்சாவடிகளில் காலை முதல் ஓட்டுபதிவு நடந்தது.காலனி பகுதில் உள்ள 1,550 வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடி எண்.134, 135 என இரு ஓட்டுச்சாவடி மட்டும்

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவியில் கூடுதல் ஓட்டுச்சாவடி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி கிராமத்தில் 3,100 வாக்காளர் உள்ளனர். இதில் 1550 வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடி எண். 131, 132, 133 என 3 ஓட்டுச்சாவடிகளில் காலை முதல் ஓட்டுபதிவு நடந்தது.காலனி பகுதில் உள்ள 1,550 வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடி எண்.134, 135 என இரு ஓட்டுச்சாவடி மட்டும் ஒதுக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடந்தது.இதனால் காலனி பகுதி மக்கள் ஓட்டுகளை செலுத்த காலை முதல் சிரமம் ஏற்படுவதாக கூறி நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் திடீர் சாலை மறியல் செய்தனர்.பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் அதிகாரிகள் சாலை மறியலை கைவிட கோரி பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக ஒரு ஓட்டுச்சாவடி அமைத்துக் கொடுத்தனர். இதனால் சுமார் 15 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X