பொது செய்தி

தமிழ்நாடு

திருவக்கரையில் அமாவாசை தரிசனம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மயிலம்-மயிலம் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடந்தது.அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணியளவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு வக்கிரகாளி அம்மனுக்கு நறுமணப் பொருட்களில் மகா அபிஷேகம் செய்யப்பட்டு ராகு கால பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு

மயிலம்-மயிலம் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடந்தது.அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணியளவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு வக்கிரகாளி அம்மனுக்கு நறுமணப் பொருட்களில் மகா அபிஷேகம் செய்யப்பட்டு ராகு கால பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வழக்கமாக நடைபெறும் ஜோதி தரிசன வழிபாடு ரத்து செய்யப்பட்டது.கோவில் வளாகத்தில் உள்ள வரதராஜ பெருமாள், வடிவாம்பிகை, குண்டலி மாமுனிவர், விநாயகர், வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X