பொது செய்தி

தமிழ்நாடு

காற்றுடன் பெய்த கனமழை மரம் விழுந்ததால் பாதிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில் பெய்யும் மழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை மூன்று முறை நிரம்பியது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையும் பெய்யத்துவங்கியுள்ளதால், அணை நிரம்பி ததும்புகிறது.இரு நாட்களாக, காற்றுடன் கனமழை பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து, சோலையாறு அணை செல்லும் ரோட்டில், பழைய வால்பாறை
 காற்றுடன் பெய்த கனமழை மரம் விழுந்ததால் பாதிப்பு

வால்பாறை : வால்பாறையில் பெய்யும் மழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை மூன்று முறை நிரம்பியது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையும் பெய்யத்துவங்கியுள்ளதால், அணை நிரம்பி ததும்புகிறது.

இரு நாட்களாக, காற்றுடன் கனமழை பெய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து, சோலையாறு அணை செல்லும் ரோட்டில், பழைய வால்பாறை வறட்டுப்பாறை என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், காலை, 6:30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், இந்த வழித்தடத்தில், எட்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 22, சோலையாறு - 43, மேல்நீராறு - 33, கீழ்நீராறு - 30, ஆழியாறு - 32, காடம்பாறை - 14, நவமலை - 8, வேட்டைக்காரன்புதுார் - 27, பெருவாரிப்பள்ளம் - 32, மணக்கடவு - 20, துாணக்கடவு - 26, சர்க்கார்பதி - 33, பொள்ளாச்சி - 10 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X