அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்': மத்திய அமைச்சர் வெளியீடு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை : 'வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது.'ப்ளூ ஓஷன் புக்ஸ்' மற்றும் அகண்ட தமிழ் உலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 'வணக்கம் தமிழகம் -- பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளன. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்,
வணக்கம் தமிழகம், பிரதமரின் தமிழ் முழக்கம், பிரதமர் மோடி

சென்னை : 'வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது.

'ப்ளூ ஓஷன் புக்ஸ்' மற்றும் அகண்ட தமிழ் உலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 'வணக்கம் தமிழகம் -- பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளன. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், காணொளி வாயிலாக புத்தகத்தை வெளியிட்டார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி ஆகியோர் காணொளி வாயிலாக பங்கேற்றனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


latest tamil news



அண்ணாமலை பேசியதாவது: பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக, 13 ஆண்டுகள்; பிரதமராக, 7 ஆண்டுகள் என, இன்றுடன், 20 ஆண்டு அரசியல் பயணத்தை பூர்த்தி செய்கிறார். இதில், குஜராத் முதல்வராக இருந்தபோது, மோடி தமிழகத்திற்கு வந்து முதன்முதலில் பேசிய விஷயங்கள் என, அனைத்தும் புத்தகத்தில் உள்ளன.

பிரதமரான பின், பல முறை தமிழகம் வந்ததுடன், பல திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர், 81 முறை பேசியுள்ளார். இதில், 71 முறை, தமிழகத்தை பல்வேறு கோணங்களில் தொட்டுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் திருக்குறள் குறித்து, 33 முறையும், பாரதியார் குறித்து, 9 முறையும் பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் தலைவரும், இந்த அளவிற்கு, திருக்குறள் மற்றும் பாரதியார் குறித்து பேசவில்லை. தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியுடன், பிரதமர் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
07-அக்-202112:51:17 IST Report Abuse
Dhurvesh வணக்கம் தமிழகம் - இப்படி சொல்லியே தமிழை காணாமல் சேயும் செயல் தான் மோடி செய்து கொண்டு இருக்கிறார் , வங்கியில் , POST OFFICE இல் உள்ள படிவத்தை ஹிந்தியியில் மாற்றி அதை மீண்டும் தமிழில் கொண்டுவர போராட்டம் இப்படி எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்து விட்டு வணக்கம் தமிழகம் - கடப்பாரை சொருகிவிட்டு , பால் பாயசம் கொடுத்து என்ன பயன்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-அக்-202112:39:46 IST Report Abuse
sankaseshan திருட்டு கழ கேம்கள் போடும் வேஷத்தைவிடவா ,நொடிக்கு நொடி மேக்கப்மாற்றுவாங்களே ,கஜனி 17 முறை தோற்றான் அதை சொல்லு அப்பு புத்தி உள்ளவன் திருந்துவான் உன்னை போன்றவன் திருந்த வாய்ப்பே இல்லை
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
07-அக்-202113:47:02 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் அஞ்சல் துறையில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டது அன்னைத்தமிழுக்கு கிட்டியது வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி...
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
07-அக்-202111:32:49 IST Report Abuse
T.sthivinayagam நல்லது. இதை போல் தாய் மொழியில் கடவுளை வணங்குவதையும் செயல் படுத்த உதவலாம்
Rate this:
Sankaran - chennai,இந்தியா
07-அக்-202113:07:33 IST Report Abuse
Sankaranநீ எந்த மொழில கடவுளை கும்பிடற?.. இந்த மொழிலதான் கும்பிடணும்னு எதாவது அரசியல் சட்டம் இருக்கா?.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X