வாக்காளர்களை தடுத்ததால் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களை தடுத்ததால் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு

Added : அக் 07, 2021
Share
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் மாலை 5:00 மணிக்கு மேல் ஓட்டளிக்க வந்த வாக்காளர்களை போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு நிலவியது.ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் 3,600 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடியில் 6 பூத்கள் அமைக்கப்பட்டது. அத்தியூர் ஊராட்சியில் 5 மற்றும் 6வது

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் மாலை 5:00 மணிக்கு மேல் ஓட்டளிக்க வந்த வாக்காளர்களை போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு நிலவியது.ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் 3,600 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடியில் 6 பூத்கள் அமைக்கப்பட்டது. அத்தியூர் ஊராட்சியில் 5 மற்றும் 6வது வார்டுகளைச் சேர்ந்த 882 வாக்காளர்கள் அங்கிருந்த 101வது பூத்தில் ஓட்டளித்தனர்.வாக்காளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் 101வது பூத்தில் காலையில் இருந்தே ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 5:00 மணிக்கு மேல் கொரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளி நுழைவு வாயில் மூடப்பட்டது.அதற்கு மேல் ஓட்டுப்போடுவதற்காக வந்த 50க்கும் மேற்பட்ட வாக்காளர்களை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதால் பரபரப்பு நிலவியது.ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்து விட்டு வெளியே வந்தவர்களுக்காக நுழைவு வாயில் திறந்தபோது, வெளியில் காத்திருந்த வாக்காளர்கள் சென்றதையடுத்து, 151 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X