பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட விரிவாக்க பணிகள் மாநில நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
உடுமலை : தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், விரிவாக்கப்பணிகள் கிடப்பில், போடப்பட்டு, மழை நீரில், கான்கிரீட் கலவை அடித்துச்செல்லப்பட்டுள்ளது; சென்டர்மீடியனும், மீண்டும் அமைக்கப்படாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பராமரிப்பில் உள்ளது.இந்த ரோட்டில், சிவசக்திகாலனி முதல் ஒரு கி.மீ.,


உடுமலை : தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், விரிவாக்கப்பணிகள் கிடப்பில், போடப்பட்டு, மழை நீரில், கான்கிரீட் கலவை அடித்துச்செல்லப்பட்டுள்ளது; சென்டர்மீடியனும், மீண்டும் அமைக்கப்படாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பராமரிப்பில் உள்ளது.இந்த ரோட்டில், சிவசக்திகாலனி முதல் ஒரு கி.மீ., தொலைவுக்கு, ரோடு விரிவாக்கப்பணிகள் சில மாதங்களுக்கு, முன் துவங்கியது.இதற்காக, ரோட்டில், இருந்த சென்டர்மீடியன் அகற்றப்பட்டு, ரோட்டோரத்தில், ஆங்காங்கே, வைக்கப்பட்டது.மேலும், ஓடுதளம் விரிவாக்கத்துக்காக, குழி தோண்டி, ஜல்லிக்கற்கள், கொட்டப்பட்டது. பின்னர், பணிகள் கிடப்பில், போடப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில், பெய்த மழையால், ரோட்டோரத்தில், சென்ற வெள்ளத்தில், விரிவாக்கத்துக்காக கொட்டி வைக்கப்பட்ட, சிறிய ஜல்லிக்கற்களை உள்ளடக்கிய கான்கிரீட் கலவை அடித்துச்செல்லப்பட்டுள்ளது.பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, மீண்டும் ரோட்டோரத்தில், குழி அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் கிடப்பில் போடப்பட்ட விரிவாக்கப்பணிகளை மீண்டும் செயல்படுத்த, தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தேவை சென்டர்மீடியன்தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு வாகனங்கள், அதிவேகத்தில் செல்கின்றன.புறநகர் பகுதி துவங்கியதும், வாகனங்களின் வேகத்தை குறைக்க, சென்டர்மீடியன் வைக்கப்பட்டு, விரிவாக்கப்பணிகளுக்காக, அகற்றப்பட்டது.இதனால், மாநில நெடுஞ்சாலையில் இருந்து, அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு வாகனங்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அய்யலுமீனாட்சி நகர், முத்து நகர் உட்பட குடியிருப்புகளுக்கு மாநில நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திரும்ப முடிவதில்லை. எனவே, நெடுஞ்சாலைதுறையினர், உடனடியாக சென்டர்மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X