தமிழ்நாடு

முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு...மாவட்டத்தில் அசம்பாவிதங்களின்றி முடிந்தது

Added : அக் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடந்த முதல் கட்ட தேர்தலில் 82.44 சதவீதம் ஓட்டுகள்பதிவாகியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், முதல் கட்டமாக ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.10 மாவட்ட கவுன்சிலர்கள், 89 ஒன்றிய கவுன்சிலர்கள், 217 ஊராட்சித் தலைவர்கள்கள், 1,608 கிராம ஊராட்சி
 முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு...மாவட்டத்தில் அசம்பாவிதங்களின்றி முடிந்தது

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடந்த முதல் கட்ட தேர்தலில் 82.44 சதவீதம் ஓட்டுகள்பதிவாகியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், முதல் கட்டமாக ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.10 மாவட்ட கவுன்சிலர்கள், 89 ஒன்றிய கவுன்சிலர்கள், 217 ஊராட்சித் தலைவர்கள்கள், 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,924 பதவியிடங்களான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 223 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 1,701 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் 5,717 பேர் களத்தில் உள்ளனர்.முதல் கட்ட தேர்தலுக்கு 939 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டது. 2 லட்சத்து 39 ஆயிரத்து 603 ஆண்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 776 பெண்கள், 85 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 568 வாக்காளர்கள் இடம் பெற்றனர்.நேற்று காலை 7:00 மணி முதல் அனைத்து பகுதியிலும் விறு விறுப்பாக ஓட்டுப் பதிவு துவங்கியது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.திருநாவலுார் ஒன்றியம், செங்குறிச்சி கிராம மக்கள் தனி கிராம ஊராட்சி வார்டு மற்றும் தனி ஓட்டுச்சாவடி அமைக்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பிற்பகல் 2:00 மணிக்கு மேல் ஓட்டு போட்டனர்.மாலை 5:00 முதல் 6:00 மணி வரை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்த மற்ற வாக்காளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர், உளுந்துார்பேட்டை ஒன்றியம் புகைப்பட்டி உள்ளிட்ட ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாணாபுரத்தில் கள்ள ஓட்டு போட்டதாக பிரச்னை ஏற்பட்டது.பதற்றம், மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் வெப் கேமரா, வீடியோ பதிவு, சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.மேலும், தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல்ஹக் ஆகியோர் நேரிலும் ஆய்வு செய்தனர்.காலை 9:00 மணி நிலவரப்படி 4.86 சதவீதம், 11 மணியளவில் 18.62 சதவீதம், பகல் 1:00 மணியளவில் 33.56 சதவீதம், மாலை 3:00 மணியளவில் 53.27 சதவீதம், 4:00 மணியளவில் 61.31 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது.இறுதியாக ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 82.70 சதவீதம், திருக்கோவிலுார் ஒன்றியம் 80.39 உளுந்துார்பேட்டை ஒன்றியம் 81.46 திருநாவலுார் ஒன்றியம் 85.24 சதவீத ஒட்டுகள் பதிவாகியது.பெரும்பாலான ஓட்டுச் சாவடிகளில் அமைதியான முறையிலேயே ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. ஒருசில ஓட்டு சாவடிகளில் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு பிரச்னைகளும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூலம் தீர்வு காணப்பட்டது.சாலை மறியல்உளுந்துார்பேட்டை அடுத்த சீதேவி ஊராட்சியில், நேற்று மாலை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிகக் கொண்டனர். சீதேவி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் - எறையூர் சாலையில் 5:15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். இரவு 10:30 மணியை கடந்தும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஏ.டி.எஸ்.பி., விஜய் கார்த்திக்ராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையும் மறியல் தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X