பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினரிடம் எம்.பி., நடத்திய பேச்சு தோல்வி உறுதி கொடுப்பதை எழுதி கேட்டதால் அதிர்ச்சி

Added : அக் 07, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை, தெப்பக்குளம் மேடு பகுதியில் பழங்குடியின மக்களிடம், போராட்டத்தை வாபஸ் பெற எம்.பி., விடுத்த கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வால்பாறை, கல்லார் செட்டில்மென்ட் பகுதியில், வசித்த பழங்குடியின மக்கள் வீடுகள் மழையில் அடித்து செல்லப்பட்டதால், தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட இடம் கேட்டு, அக்., 2ம் தேதி முதல், தொடர்ந்து
 பழங்குடியினரிடம் எம்.பி., நடத்திய பேச்சு தோல்வி   உறுதி கொடுப்பதை எழுதி கேட்டதால் அதிர்ச்சி


வால்பாறை : வால்பாறை, தெப்பக்குளம் மேடு பகுதியில் பழங்குடியின மக்களிடம், போராட்டத்தை வாபஸ் பெற எம்.பி., விடுத்த கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை, கல்லார் செட்டில்மென்ட் பகுதியில், வசித்த பழங்குடியின மக்கள் வீடுகள் மழையில் அடித்து செல்லப்பட்டதால், தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட இடம் கேட்டு, அக்., 2ம் தேதி முதல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் ஆகியோர், பழங்குடியின மக்களிடம் பேச்சு நடத்தினர்.எம்.பி., பேசும் போது, 'உங்களது உரிமையை யாரும் தட்டிப்பறிக்கவில்லை.

தெப்பக்குளம் மேடு பகுதியில் உடனடியாக வீடு கட்ட இடம் தருவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே, மூன்று ஆண்டுகள் காத்திருந்த நீங்கள், மேலும் ஆறு மாதங்கள் காத்திருங்கள். எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும்,'' என்றார்.அப்போது, குறுக்கிட்ட பழங்குடியின மக்கள், 'வீடு கட்ட இடம் வழங்கும் வரை தெப்பக்குளம் மேடு பகுதியில் போராட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர மாட்டோம். வனத்துறையினர் யாரும் எங்களை தொந்தரவு செய்யக்கூடாது. ஆறு மாதத்தில் வீடு கட்ட இடம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை, நீங்கள் எங்களுக்கு கைப்பட எழுதிக்கொடுங்கள்,' என, எம்.பி.,யிடம் கேட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர், 'அப்படியெல்லாம் எழுதித்தர முடியாது. ஆனால், வீடு கட்ட நிச்சயம் இடம் வழங்கப்படும்,' என்றனர்.இதனால், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பேச்சு நடத்த சென்றஎம்.பி., பழங்குடியினருக்கு பிஸ்கெட் பாக்கெட்களை வழங்கிதிரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X