பொது செய்தி

தமிழ்நாடு

இதற்கு தீர்வே இல்லையா? சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றம்...தொடரும் பாதாள சாக்கடை திட்ட பரிதாபம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலையில், பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பு பணி, நகராட்சி வசம் வந்தும், சுத்திகரிப்பு மையம் முழுமையாக இயங்காமல் கழிவு நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இனிமேலாவது, முறையாக செயல்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளில், ஏறத்தாழ, 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நான்கு
 இதற்கு தீர்வே இல்லையா?   சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றம்...தொடரும் பாதாள சாக்கடை திட்ட பரிதாபம்

உடுமலை : உடுமலையில், பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பு பணி, நகராட்சி வசம் வந்தும், சுத்திகரிப்பு மையம் முழுமையாக இயங்காமல் கழிவு நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இனிமேலாவது, முறையாக செயல்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளில், ஏறத்தாழ, 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நான்கு ஆண்டுக்கு முன், நகராட்சியில், 56.07 கோடி ரூபாய் செலவில் பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதற்காக, 96.96 கி.மீ., நீளம் பாதாளச்சாக்கடை குழாய்கள், 3,900 ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டது.

சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரிக்க, ஏரிப்பாளையம் பகுதியில், 7.81 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. தற்போது, 12 ஆயிரம் இணைப்புகள் வரை கொடுக்கப்பட்டு, தினமும், 4 எம்.எல்.டி., (40 லட்சம் லிட்டர்) கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வருகிறது.குடிநீர் வடிகால் வாரியம் திட்டத்தை செயல்படுத்திய நிலையில், திட்ட வடிவமைப்பு முதல் பராமரிப்பு வரை குளறுபடி காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது.நான்கு ஆண்டு இழுபறிக்குப்பின், கடந்த ஒன்றரை மாதமாக நகராட்சி வசம் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.பயன்பாட்டிற்கு வந்தது முதல், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படுத்தப்படாமல், பெரும்பாலும் கழிவு நீர் நேரடியாக, ஓடையில் வெளியேற்றப்படுகிறது.திட்டக்குழாய்கள், ஆளிறங்கும் குழிகள் அமைத்ததில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மழைக்காலங்களில், மழை நீரும் கழிவு நீருடன் சேர்ந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கூடுதல் நீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு மையத்திற்கு வரும் நீர், பெரிய அளவிலான தொட்டியில் சேகரிக்கப்பட்டு, கடினத்தன்மை நீக்கப்பட்டு, சுத்திகரித்து, இறுதியாக ஆக்சிஜனேற்றம் செய்து, நன்னீராக மாற்றி வெளியேற்ற வேண்டும்.

மீதம் உள்ள கசடுகளை (ஸ்லெட்ஜ்) தொட்டியில் சேகரித்து, கசடு உலர்த்தும் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நகராட்சி வசம் பாதாளச்சாக்கடை திட்டம் ஒப்படைக்கப்பட்டு, ஒன்றரை மாதமாகியும், சுத்திகரிப்பு மையம் முழுமையாக செயல்படுவதில்லை.மின்மோட்டார்கள் பழுது, ஆக்சிஜனேற்றம் மேற்கொள்ளும் பகுதி இயங்காதது, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால், சுத்திகரிப்பு மையத்திற்கு வரும் நீர் அனைத்தும், பெரும்பாலும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.இதனால், கடும் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, பெதப்பம்பட்டி ரோட்டிலுள்ள ஓடையில் தேங்கி, கடும் துர்நாற்றம், விவசாய நிலங்கள் பாதிப்பு, கால்நடைகளுக்கு குடிநீர் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மாசடைகிறது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :

பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு தற்போது, நகராட்சி வசம் எடுக்கப்பட்டு, முழுமையாக சரி செய்யும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது நீக்குவது குறித்து அறிக்கை அளித்துள்ளனர்.ஆக்சிஜனேற்றம் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், சுத்திகரிக்காதது போல் உள்ளது. முழுமையாக பராமரிக்கவும், ஜெட்ராடிங் இயந்திரம் உள்ளிட்ட பழுது நீக்கும் வாகனங்கள் பராமரிக்கும் பணிகளும் நடக்கிறது.விரைவில், அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பராமரிப்பு பணி முழுமையாக மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறதாசுத்திகரிப்பு நிலையம் செயல்படுவது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது, இயந்திரம் செயல்பாடு, உள்ளே வரும் கழிவு நீர், வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரில், அங்கீகரிக்கப்பட்ட அளவில், நன்னீர் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பாதாள சாக்கடை கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமல் ஓடையில் வெளியேற்றப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X