பொது செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த மீனவரின் குடும்பத்திற்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; மீனவர்; நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்துவிட்டு, கரைக்கு திரும்பி, வலையில் இருந்த மீன்களை பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில், பாலகிருஷ்ணன்

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த மீனவரின் குடும்பத்திற்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; மீனவர்; நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்துவிட்டு, கரைக்கு திரும்பி, வலையில் இருந்த மீன்களை பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில், பாலகிருஷ்ணன் இறந்தார்.தகவலறிந்த, பாண்டியன் எம்.எல்.ஏ., இறந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு, ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மேற்கு ஒன்றிய செயலர் ராசாங்கம், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், பேராசிரியர் ரங்கசாமி, ஊராட்சி தலைவர் கோமதி கல்யாணம், ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், ரவி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X