பொது செய்தி

தமிழ்நாடு

கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய துணை பேராசிரியருக்கு விருது

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மைய துணை பேராசிரியர் தெய்வசிகாமணிக்கு சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று

சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மைய துணை பேராசிரியர் தெய்வசிகாமணிக்கு சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இங்கு பணிபுரியும் துணை பேராசிரியர் தெய்வசிகாமணி வெளியிட்டுள்ள பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்திற்கு துாண்டுகோலாக உள்ள தெய்வசிகாமணி பல நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று தனது ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.இதன் காரணமாக பல விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் ரெக்கார்டு ஓனர் நிறுவனம் சார்பில், இந்தியாவின் சிறந்த பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் என்ற விருதுக்கு இணைய வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை பெற்று பல்கலைகழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். குறிப்பாக மீன்களின் தேவையற்ற உறுப்புகளில் இருந்து, மீன்களுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கும் உணவு தயாரிப்பது குறித்த ஆராய்ச்சியின் மூலம் உலக அளவில் பெரும் பாராட்டை இவர், பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் இந்திய அரசால் பாராட்டுகளை பெற்றதுடன், கடல் வாழ் உயராய்வு மையத்திற்கு பல ஆராய்ச்சி செய்வதற்கான நிதி கொடுத்து ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்துள்ளது.விருது பெற்ற துணை பேராசிரியர் தெய்வசிகாமணிக்கு கடல் வாழ் உயிரின உயராய்வு மைய புல முதல்வர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வி.சி., கன்வினர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X