பொது செய்தி

தமிழ்நாடு

திருவந்திபுரம் கோவிலில்பிரம்மோற்சவம் துவக்கம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கடலுார்-திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் 40 ஆண்டுகாலமாக தேசிகர் தவம் புரிந்து தேவநாதசாமி மற்றும் ஹயக்கிரீவரை வழிபட்டதாக ஐதீகம்.இங்குள்ள தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கடலுார்-திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் 40 ஆண்டுகாலமாக தேசிகர் தவம் புரிந்து தேவநாதசாமி மற்றும் ஹயக்கிரீவரை வழிபட்டதாக ஐதீகம்.இங்குள்ள தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிகர் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் மற்றும் தேசிகர் கொடியேற்றத்தின்போது அருள்பாலித்தனர். தொடர்ந்து, தேசிகருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. வரும் 15ம் தேதி ரத்தனங்கி சேவை, 17ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X