பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல் மதுக்கடை மூட உத்தரவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் சமீரன் அறிக்கை:கோவை மாவட்டத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 7ம் தேதி காலை 10:00 முதல் 9ம் தேதி இரவு 12:00 மணி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 12ம் தேதியன்றும் குறிப்பிட்ட பகுதிகளில்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் சமீரன் அறிக்கை:

கோவை மாவட்டத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 7ம் தேதி காலை 10:00 முதல் 9ம் தேதி இரவு 12:00 மணி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 12ம் தேதியன்றும் குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் இருந்து, ஐந்து கி.மீ., சுற்றளவுக்குள் இருக்கும் மதுக்கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பகுதியில், தலைவர் தேர்தல் திவான்சாபுதுார், தென்குமாரபாளையம் ஊராட்சிகளில் நடக்கிறது. இது மட்டுமின்றி, மூன்று இடங்களில் வார்டு உறுப்பினர் தேர்தலும் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X