தமிழ்நாடு

தீவிரம்! பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்...தாழ்வான 278 இடங்கள் கண்காணிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கடலுார்-வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்திற்குள் துவங்க உள்ளதால் கால்வாய், நீர்நிலைகள் துார் வாருதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது. அதையடுத்து வடகிழக்குப் பருவ மழை ஒரு வாரத்திற்குள் துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில்
 தீவிரம்! பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்...தாழ்வான 278 இடங்கள் கண்காணிப்பு

கடலுார்-வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்திற்குள் துவங்க உள்ளதால் கால்வாய், நீர்நிலைகள் துார் வாருதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது. அதையடுத்து வடகிழக்குப் பருவ மழை ஒரு வாரத்திற்குள் துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பருவமழை காலங்களில் கடலுார் மாவட்டம் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2015ல் பெய்த வடகிழக்கு பருவமழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.

இந்த ஆண்டும் சராசரி மழையளவை விட கூடுதல் மழை பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது.அதனால், வடகிழக்கு பருவ மழையையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. நீர்நிலைகள், கழிவுநீர் கால்வாய்கள் போன்றவற்றில் உள்ள அடைப்புகளை சரி செய்ய துார் வாரும் பணி தொடங்கி நடக்கிறது. நேற்று அதிரடியாக கெடிலம் ஆற்றில் உள்ள கருவேலமரங்கள், வடிகால் வாய்க்கால் போன்றவற்றில் இருந்த அடைப்புகள் அகற்றும் பணி நடந்தது.எஞ்சியுள்ள பணிகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி கூடுதல் செயலாளர் பனீந்திரரெட்டி, கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மழைக்காலங்களில் நீர்நிலைகளின் கொள்ளளவை கண்காணித்து, அதற்கேற்றார்போல் நீரினை வெளியேற்ற வேண்டும்.மாவட்டத்தில் தாழ்வான, மிகவும் தாழ்வான பகுதிகள் 278 கண்டறியப்பட்டுள்ளன.

வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள வட்டார அளவிலான 14 மண்டல அலுவலர்கள் மற்றும் நகராட்சி அளவிலான 5 மண்டல அலுவலர்கள் நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மண்டல அலுவலர்கள் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடம், பேரிடர் காலத்தில் பொது மக்கள் தங்க வைக்கப்பட வேண்டிய இடங்களில் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X