பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதற்குள் கலந்தாய்வு எதிர்பார்ப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்தாண்டு நடத்தப்படவில்லை.இதனால்,பணி நிரவல் காரணமாக இடமாறுதல் பெற்றவர்கள், மீண்டும் பழைய ஒன்றியத்திற்கு, திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர்.பள்ளி திறப்பதற்குள் கலந்தாய்வு நடத்தினால், கற்பித்தல் பணிகளில் சிரமம் குறையும் என்ற, எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணிகோவைமாவட்ட



பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்தாண்டு நடத்தப்படவில்லை.இதனால்,பணி நிரவல் காரணமாக இடமாறுதல் பெற்றவர்கள், மீண்டும் பழைய ஒன்றியத்திற்கு, திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர்.

பள்ளி திறப்பதற்குள் கலந்தாய்வு நடத்தினால், கற்பித்தல் பணிகளில் சிரமம் குறையும் என்ற, எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணிகோவைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், ''கடந்தாண்டு கலந்தாய்வு நடக்காததால், சீனியாரிட்டி பட்டியலில், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த இரு ஆண்டுகளில், தொடக்க கல்வித்துறையில் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, நிஜமான காலியிடங்களை வெளியிட வேண்டும்.கலந்தாய்வு நடத்திய பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், இப்பணிகளை விரைந்து முடித்தால், பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X