பொது செய்தி

இந்தியா

ஒரே கூரையின் கீழ் அனைத்து சிகிச்சை

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு, இனி ஒரே கூரையின் கீழ், அனைத்து விதமான சிகிச்சைகளும் கிடைக்கும்.கர்நாடக அரசு மருத்துவமனைகளில், பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனை மிகவும் பிரபலமானதாகும். பி.எம்.சி.ஆர்.ஐ., எனும் பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மருத்துவமனைக்கு, தினமும்

பெங்களூரு-பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு, இனி ஒரே கூரையின் கீழ், அனைத்து விதமான சிகிச்சைகளும் கிடைக்கும்.கர்நாடக அரசு மருத்துவமனைகளில், பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனை மிகவும் பிரபலமானதாகும். பி.எம்.சி.ஆர்.ஐ., எனும் பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மருத்துவமனைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.இதற்கு முன் இம்மருத்துவமனையில், வெவ்வேறு கட்டடங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் ஒரு கட்டடத்திலிருந்து, மற்றொரு கட்டடத்துக்கு அலைபாய வேண்டியிருந்தது. இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருதி, விக்டோரியா மருத்துவமனையின், புதிய ஒ.பி.டி., கட்டடத்தின் மீது, கூடுதலாக ஐந்து மாடிகள் கட்டப்பட்டுள்ளன.சிகிச்சை மருத்துவமனையின், தனித்தனி பிரிவுகளில் இயங்கி வந்த சிகிச்சை மையங்கள் தற்போது ஒரே கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அனைத்து விதமான நோய்களுக்கும், ஒரே கூரையின் கீழ் சிகிச்சை கிடைக்கும்.நோயாளிகள் பரிசோதனை செய்து கொள்ளவும், சிகிச்சை பெறவும் இது உதவியாக இருக்கும்.கூடுதல் சிகிச்சை தேவையென்றால் மட்டும், வாணி விலாஸ், இ.என்.டி., நெப்ரோ யுராலஜி என, மற்ற பிரிவுகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுவர்.விக்டோரியா மருத்துவமனை உயர் அதிகாரிகள் கூறியதாவது:வலியால் அவதிப்பட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சிகிச்சைக்காக அலைபாய்வதை தவிர்க்கும் நோக்கில், ஒரே கட்டடத்தில் அனைத்து சிகிச்சைகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிகிச்சை பிரிவுகளும் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆறு மாடிகள் கொண்ட, புதிய கட்டடத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும், முதற்கட்ட சிகிச்சை கிடைக்கும். இலவசமாக மருந்து கீழ் தளத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை கிடைக்கிறது. இலவசமாக மருந்து வழங்கும் மருந்தகமும் உள்ளது. முதல் மாடியில், ஜெனரல் மெடிசன், ஜெனரல் சர்ஜரி பிரிவு உள்ளது.இரண்டாவது மாடியில் சரும பிரிவு, மனநோய் பிரிவு உள்ளது. 3வது மாடியில் சுவாசப்பை சிகிச்சை பிரிவு, ரேடியோ சர்ஜரி, சர்ஜிகல் காஸ்ட்ரோ, மெடிகல் காஸ்ட்ரோ பிரிவுகள், 4வது மாடியில் சுகாதார திட்டங்களின் பிரிவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X