லட்சுமணதீர்த்த அணை, அபாயத்தில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லட்சுமணதீர்த்த அணை, அபாயத்தில்

Added : அக் 07, 2021
Share
மைசூரு-ஹூன்சூரின், 700 ஆண்டுகள் வரலாறு கொண்ட லட்சுமணதீர்த்த அணை, அபாயத்தில் உள்ளது. அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. காரணம், அணை சுவர்களின் கற்பாறைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மைசூரு ஹுன்சூரின், கட்டேமலளவாடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமண தீர்த்த அணை, சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். 700 ஆண்டுகள் வரலாறு கொண்ட அணை,

மைசூரு-ஹூன்சூரின், 700 ஆண்டுகள் வரலாறு கொண்ட லட்சுமணதீர்த்த அணை, அபாயத்தில் உள்ளது. அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. காரணம், அணை சுவர்களின் கற்பாறைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மைசூரு ஹுன்சூரின், கட்டேமலளவாடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமண தீர்த்த அணை, சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். 700 ஆண்டுகள் வரலாறு கொண்ட அணை, இப்பகுதி மக்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. இதிலிருந்து பாயும் தண்ணீர், 1,500 ஏக்கர் நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறது. இரண்டு ஆண்டுகளாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்புக்காக பொருத்தியிருந்த, பெரிய கற்பாறைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.அணையின் காங்கிரீட் கூட பெயர்ந்து விட்டது. அணை தற்போது அபாயத்தில் உள்ளது. இம்முறை குறைவான மழை பெய்ததால், அணைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவேளை மழை அதிகரித்து, வெள்ளம் வந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என, கூறப்படுகிறது.அணையின் அபாயத்தை அறிந்த, ஹூன்சூர் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், அரசின் கவனத்துக்கு எடுத்து சென்றார். சில மாதங்களுக்கு முன், வல்லுனர் குழு அணையை ஆய்வு செய்தது. ஆனால் அணையின் பாதுகாப்புக்கு அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஹூன்சூரு பொறியாளர் சுரேஷ் கூறுகையில்,''கட்டேமலளவாடியின், லட்சுமண தீர்த்த அணையை பாதுகாக்கவும், கால்வாய்களை புதுப்பிப்பது குறித்தும், அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்த பின், பணிகள் துவங்கும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X