திரிணமுல் காங்.,கை எதிர்த்து களமிறங்க காங்கிரஸ் முடிவு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோல்கட்டா: தோழமை கட்சி என்றும் பாராமல், தங்கள் தலைவர்களை வளைத்து வருவதால், ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் இனி நடக்க இருக்கும் இடைத் தேர்தல்களில், வேட்பாளர்களை களமிறக்க முடிவுசெய்துள்ளது.மேற்கு வங்கத்தில் காங்., தலைவர்களை, திரிணமுல் காங்., தன் பக்கம் இழுத்து வருவதால், காங்., நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. சமீபத்தில் காங்., மூத்த தலைவரும், கோவா முன்னாள்
TMC, Congress, Mamata Banerjee, Mamata, Trinamool Congress,

கோல்கட்டா: தோழமை கட்சி என்றும் பாராமல், தங்கள் தலைவர்களை வளைத்து வருவதால், ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் இனி நடக்க இருக்கும் இடைத் தேர்தல்களில், வேட்பாளர்களை களமிறக்க முடிவுசெய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காங்., தலைவர்களை, திரிணமுல் காங்., தன் பக்கம் இழுத்து வருவதால், காங்., நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. சமீபத்தில் காங்., மூத்த தலைவரும், கோவா முன்னாள் முதல்வருமான லுசினோ பெலிரோ, திரிணமுல் காங்., கட்சியில் இணைந்தார்.

அதற்கு முன், காங்., தேசிய மகளிர் அணி தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ், திரிணமுல் காங்.,கில் இணைந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றார். இவை, காங்., கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான அணியை அமைக்கும் முயற்சிகளில், காங்., - திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.


latest tamil news



எனினும், தோழமை கட்சியான காங்.,கில் இருந்து தலைவர்களை திரிணமுல் காங்., தன் பக்கம் இழுத்து வருவது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளதை காட்டுகிறது. இதனால் கோபமடைந்துள்ள காங்., மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இடைத் தேர்தல்களில், திரிணமுல் காங்., கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த முடிவுசெய்துள்ளது.

வரும் 30ம் தேதி, மேற்கு வங்கத்தின் தின்ஹடா, சந்திபூர், கார்தகா, கொசபா ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த இடைத்தேர்தல்களில், காங்., தன் வேட்பாளர்களை களமிறக்கஉள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை காங்., நிறுத்தாதது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
07-அக்-202113:52:31 IST Report Abuse
திரு.திருராம் மம்தா இந்தியாவின் பிரதான எதிர்கட்சியாக முயல்கிறார் என புரிகிறது
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
07-அக்-202110:26:57 IST Report Abuse
R. Vidya Sagar கைப்புள்ள ஜோக்தான் ஞாபகம் வருது.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
07-அக்-202111:46:23 IST Report Abuse
vadiveluஎனக்கு கடாபி , சதாம் ஹுசைன் நிலைதான் நினைவுக்கு வருது.ஒரு நாள் அது இந்த நாட்டை ஏமாற்றி வரும் அந்நியருக்கு நடக்கும் என்ற பயம் இருக்கு....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202108:39:47 IST Report Abuse
duruvasar தமிழக காங்கிரஸ் திமுக அணி முதன்மை செயலர் கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ் அய்யாவும், துணைத்தலைவர் அண்ணன் அழகிரி அவர்களும் காங்கிரஸ் தலைமையை கண்டித்து முரசொலியில் தொடர் கட்டுரை எழுதவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X