பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறல்; அதிவேகம்; அலட்சியம் மக்களை அலற விடும் இளசுகள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், இருசக்கர வாகனங்களில் ஏகப்பட்ட விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிவேகமாக வாகனம் ஓட்டியும், இளைஞர்கள் பொதுமக்களை அலற விடுவது அதிகரித்துள்ளது.பொள்ளாச்சியில், கடந்த, 10 ஆண்டுகளில் வாகனப் பெருக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஓட்டுனர் உரிமம் பெறும் வயது கூட வராத, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக சக்தி வாய்ந்த பைக்குகளில்
 விதிமீறல்; அதிவேகம்; அலட்சியம் மக்களை அலற விடும் இளசுகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், இருசக்கர வாகனங்களில் ஏகப்பட்ட விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிவேகமாக வாகனம் ஓட்டியும், இளைஞர்கள் பொதுமக்களை அலற விடுவது அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சியில், கடந்த, 10 ஆண்டுகளில் வாகனப் பெருக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஓட்டுனர் உரிமம் பெறும் வயது கூட வராத, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக சக்தி வாய்ந்த பைக்குகளில் சுற்றித்திரிவது, விபத்து அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.ஒரே பைக்கில், மூன்று பேர், நான்கு பேர் செல்வது, ெஹல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, நெரிசல் மிகுந்த வீதிகளில் வேகமாக வாகனம் செலுத்துவது, அனுமதிக்கு முரணாக ஒருவழிப்பாதையில் செல்வது, என, சாலை விதிகளை மதிக்காமல் சுற்றுகின்றனர். இதனால், ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டுனர்கள் அச்சப்படுகின்றனர்.

இதை கட்டுப்படுத்த, இளைஞர்களின் பெற்றோருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. 18 வயது நிரம்பாத சிறுவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டி பிடிபட்டாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ, பெற்றோருக்கு தண்டனை உண்டு என்பதை உணர வேண்டும்.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X