பொது செய்தி

தமிழ்நாடு

வடசித்தூரில் மாட்டுச்சந்தை துவங்குங்க! கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கைவிடப்பட்ட மாட்டுச்சந்தையை, வடசித்துாரில் துவக்க வேண்டும் என, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் உள்ள வடசித்துார், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, பனப்பட்டி, காரச்சேரி, குருநல்லிபாளையம், சேரிபாளையம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், கால்நடை


கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கைவிடப்பட்ட மாட்டுச்சந்தையை, வடசித்துாரில் துவக்க வேண்டும் என, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் உள்ள வடசித்துார், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, பனப்பட்டி, காரச்சேரி, குருநல்லிபாளையம், சேரிபாளையம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், கால்நடை வளர்ப்புக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதி விவசாயிகள் நாட்டு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கின்றனர். கறவைகள் பராமரிப்பு மற்றும் பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவசாயிகள், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கு, தினமும், 35 - 40 ஆயிரம் லிட்டருக்கும் கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.

விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், அரை ஏக்கர் முதல், ஒரு ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான, பால் உற்பத்தியை அதிகரிக்கும் பசுந்தீவனங்களை பயிரிட்டுள்ளனர்.கறவை மாடுகள் அதிகரித்துள்ள நிலையில், கிராமங்கள் தோறும், கால்நடை வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர். விவசாயிகளிடம் மாடுகளை வாங்கி, சந்தையில் விற்பதும், சந்தையில் இருந்து கறவை மாடுகளை வாங்கி விவசாயிகளுக்கு விற்பதையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன், வடசித்துார் பகுதியில் மாட்டுச்சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்குள், கிணத்துக்கடவு வாரச்சந்தை பகுதியில், மாட்டுச்சந்தை துவக்கப்பட்டு, விற்பனைக்கு மாடுகள் வரத்து இல்லாததால், சந்தை முடங்கியது.இந்நிலையில், வடசித்துார், மெட்டுவாவி, பனப்பட்டி பகுதிகளில் கால்நடைகளுக்கான மருந்தகம் செயல்படும் நிலையில், வடசித்துாரில் மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

புதிதாக, மாட்டுச்சந்தை துவக்காவிட்டாலும், கிணத்துக்கடவில் கைவிடப்பட்ட மாட்டுச்சந்தையை, வடசித்துாரில் துவக்க வேண்டும் என, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X