பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு ஆக்கிரமிப்பால் சிக்கல் பஸ் இயக்குவதில் தடுமாற்றம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில் இருந்து, நல்லகாத்து செல்லும் வழியில், அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.ஆனால், வால்பாறை நகரில் இருந்து ஒதுக்குப்புறமாக பஸ் ஸ்டாண்ட் இருப்பதால், பயணிகள், பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் இருப்பதாக கூறி, காந்திசிலை வளாகத்திலேயே நின்று பஸ் ஏறினர். இதனால், அப்பகுதி தற்காலிக பஸ் ஸ்டாண்டாக

வால்பாறை : வால்பாறையில் இருந்து, நல்லகாத்து செல்லும் வழியில், அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.

ஆனால், வால்பாறை நகரில் இருந்து ஒதுக்குப்புறமாக பஸ் ஸ்டாண்ட் இருப்பதால், பயணிகள், பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் இருப்பதாக கூறி, காந்திசிலை வளாகத்திலேயே நின்று பஸ் ஏறினர். இதனால், அப்பகுதி தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டது.தற்போது, காந்திசிலை வளாகத்தில் இருந்து அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும், பஸ் இயக்குவதில் சிரமம் இருப்பதாக டிரைவர்கள் புலம்புகின்றனர். அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, காந்திசிலை வரை, ரோட்டின் இருபக்கமும் ஆக்கிரமிப்பு கடைகளும், அதிக அளவிலான வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, காந்திசிலை வரை பஸ் இயக்க முடிவதில்லை.சுற்றுலா பயணிகள் வாகனங்களும் ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதோடு, இடையூறாக ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X